'Kalquari Venam...'- School students who wrote and pasted the letter and boycotted the class

Advertisment

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் கடிதத்தின் வாயிலாக தங்களது கோரிக்கையை எழுதி வைத்துவிட்டு வகுப்புகளை புறக்கணித்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அக்கரைப்பட்டி அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் நெடுஞ்சாலை பணிக்காக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக முள்வேலி அமைத்து இயந்திரங்களைப் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.

விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கல்குவாரி அமைக்கப்படுவதால் இதற்கு எதிராக பொதுமக்கள் ஒரு மாத காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அக்கரைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் பள்ளி வளாகத்தின் கேட்டில் கல்குவாரி அமைப்பதற்கு எதிராக தங்களது கோரிக்கை கடிதங்களை எழுதி ஒட்டிவிட்டு வகுப்புகளை புறக்கணித்து சென்றுள்ளனர்.