/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TTV dhinakaran_0.jpeg)
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு, இன்று காலை திடீரென வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆதரவாளரான கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்காதது வருத்தமளிக்கிறது. அதிமுகவில் சரிவர செயல்பட முடியவில்லை. எம்எல்ஏ பணிகளை செய்ய மாவட்டத்தில் முட்டுக்கட்டை போடப்படுகிறது அதனால் டிடிவி தினகரனுக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன்.
மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கே உள்ளது. இது ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி மூலம் அனைவருக்கும் தெரியவந்தது. விழுப்புரத்தில் என்ன பிரச்னை என்பது முதல்வருக்கு தெரியும். அமைச்சர் சண்முகத்திற்கும் எனக்கும் பிரச்னை இல்லை.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புது மாவட்டம் அறிவிக்க வேண்டும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர் முதல்வராக வாய்ப்பு உள்ளது. அதிமுகவிலிருந்து மேலும் பல எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Follow Us