/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/KALLAKURICHI 4566333.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவாசனூர் கோட்டை அருகே உள்ளது புகைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் ராஜாஜி. இவருக்கு வயது 24. அதே அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிபவர் வீராசாமி (வயது 45). இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (19/06/2020) புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் விளை நிலத்தினை அளவீடு செய்வதற்காக இருவரும் சென்றுள்ளனர்.
அங்கு நிலத்தை அளவீடு செய்யும்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதுமுற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப் புரண்டுள்ளனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எலவாசனூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவருக்கும் இடையே நடந்த கைகலப்பு சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை தாசில்தார் காதர் அலி விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளார்.
  
 Follow Us