Advertisment

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - மறுகூராய்வு நிறைவு

பரக

Advertisment

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம், மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை நடத்த அனுமதி அளித்து இடைக்கால தீர்ப்பு வழங்கியது. மாணவியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது. அக்குழுவில் கீதாஞ்சலி (விழுப்புரம்), கோகுலநாதன்( சேலம்), ஜூலியான ஜெயந்தி (திருச்சி), ஓய்வுபெற்ற தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் இருக்கின்றனர்.

எங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரும் மறு பிரேதப் பரிசோதனையில் இடம்பெற வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கை வைத்த நிலையில் அதனை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மாணவியின் தந்தை தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மறு பிரேதப் பரிசோதனையில் எங்கள் தரப்பு மருத்துவர் இடம்பெற வேண்டும்; அதுவரை உடற்கூராய்வுக்கு தடை விதிக்க வேண்டும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையில் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் நீங்கள் திடீரென மாற்றம் கொண்டுவர வேண்டும் எனக் கோரினால் அதனை செய்ய முடியாது; வழக்கை நாளைக்கு தள்ளிவைக்கிறோம். உடற்கூராய்வை நிறுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவியின் மறு பிரேதப் பரிசோதனை மாலை 4 மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் துவங்கியது. இந்நிலையில், மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது உடற்கூறாய்வு நிறைவடைந்துள்ளது.

Doctor police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe