Skip to main content

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - மறுகூராய்வு நிறைவு

Published on 19/07/2022 | Edited on 19/07/2022
பரக

 

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது. அதனை ஏற்ற  நீதிமன்றம், மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை நடத்த  அனுமதி அளித்து இடைக்கால தீர்ப்பு வழங்கியது. மாணவியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது. அக்குழுவில் கீதாஞ்சலி (விழுப்புரம்), கோகுலநாதன்( சேலம்), ஜூலியான ஜெயந்தி (திருச்சி), ஓய்வுபெற்ற தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் இருக்கின்றனர்.


எங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரும் மறு பிரேதப் பரிசோதனையில் இடம்பெற வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கை வைத்த நிலையில் அதனை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மாணவியின் தந்தை தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மறு பிரேதப் பரிசோதனையில் எங்கள் தரப்பு மருத்துவர் இடம்பெற வேண்டும்; அதுவரை உடற்கூராய்வுக்கு தடை விதிக்க வேண்டும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையில் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் நீங்கள் திடீரென மாற்றம் கொண்டுவர வேண்டும் எனக் கோரினால் அதனை செய்ய முடியாது; வழக்கை நாளைக்கு தள்ளிவைக்கிறோம். உடற்கூராய்வை நிறுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து மாணவியின் மறு பிரேதப் பரிசோதனை மாலை 4 மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் துவங்கியது. இந்நிலையில், மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது உடற்கூறாய்வு நிறைவடைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.