Advertisment

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; நீதி கேட்டு சென்னையில் போராட்டம்

Kallakurichi student dies; Protest in Chennai for justice

Advertisment

தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் மாதர் சங்கம் சார்பாக கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு போராட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. முதல்வர் பயணம் செய்யும் பிரதான சாலை என்பதால் போராட்டத்திற்கு வரும் போராட்டக்காரர்களை ஆங்காங்கு காவல்துறையினர் கைது செய்தனர்.

இருப்பினும், ராதாகிருஷ்ணன் பிரதான சாலையில் மாதர் சங்க நிர்வாகிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாதர் சங்கத்தின் செயலாளர் ராதிகா மற்றும் சங்கத்தின் தலைவர் வாசுகி தலைமையில் போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் நீதி கேட்டு மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவியின் மரணத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?, என்பதுபோன்ற முழக்கங்களை எழுப்பி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர்.

Chennai kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe