Advertisment

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரர்! நிதியுதவி செய்த சக காவலர்கள்! 

Kallakurichi Police man who passes away in road accident..

கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பிமாதேவி அருகே வசித்துவந்தவர் கமலகண்ணன் (35). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரியாக பணியாற்றிவந்தார். மேலும், பகுதி நேரமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல்படையிலும் பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த 26.11.21 அன்று பணிமுடிந்து வீடு திரும்பும்போது, தியாகதுருகம் அருகே சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

Advertisment

இவரது மறைவுக்குக் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார். அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல்படை காவலர்கள் சார்பில் கமலக்கண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உதவி செய்ய முடிவெடுத்து, கள்ளக்குறிச்சி மண்டல தளபதி வசந்தபாலன் 25,000 ரூபாயும் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள் சேர்ந்து 25,000 ரூபாயும் என மொத்தம் 50,000 ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்.

Advertisment

அந்த நிதியைக்கடந்த 4ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், கமலக்கண்ணன் குடும்பத்தினரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் வழங்கினார். இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட மண்டல தளபதி வசந்தபாலன், ஊர்க்காவல்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

kallakurichi police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe