Kallakurichi MP gowthamasigamani

வாட்சப் மூலம் உதவி கேட்ட சின்னசேலம் ஒன்றியத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் மகாலிங்கத்திற்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி ரூ.10,000 மதிப்புள்ள சட்டப் புத்தகங்களை வழங்கினார்.

Advertisment

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் ஒன்றியம், எலவாடி கிராமத்தைச் சேர்ந்த கோவை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் மகாலிங்கம், வாட்சப் மூலம் தனது சட்டக் கல்லூரி படிப்பைத் தொடர, புத்தகங்கள் வாங்கிப் படிக்க வசதியில்லை எனவே சட்டப்படிப்பை தொடர தனக்குப் புத்தகங்கள் வாங்கித் தருமாறு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்துமகாலிங்கத்திற்கு ரூ.10,000 மதிப்புள்ள சட்டப் புத்தகங்களை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணிவழங்கி, நன்றாகப் படிக்க வேண்டும் எனத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.