kallakurichi mla prabhu love marriage chennai high court order

காதல் திருமணம் செய்த எம்.எல்.ஏ.பிரபுவின் மனைவியை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில் 19 வயது நிரம்பாத தனது மகளைக் கடத்தி எம்.எல்.ஏ.பிரபு திருமணம் செய்ததாகவும், தனது மகளை மீட்டு தர வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

Advertisment

kallakurichi mla prabhu love marriage chennai high court order

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று (08/10/2020) விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிபதிகள், காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தனது மனைவியை நாளை (08/10/2020) மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு, வழக்கு விசாரணைக்கு நாளைக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, தம்மை யாரும் கடத்தவில்லை என நேற்று முன்தினம் எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யா வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment