கள்ளக்குறிச்சி தாலுக்காவில் 5 கிராமங்களில் கிராம பணியாளர் பணியிடங்கள் காலியாக இருந்துள்ளன. இதற்காக வட்டாச்சியர் தயாளன் 5 பணியிடங்களுக்கான பணி நியமனம் செய்துள்ளார். இந்த பணியிடங்கள் முறையாகவும், நேர்மையாகவும் நிரப்படாமல் முறைகேடான வகையில் நிரப்பப்பட்டுள்ளன என்றும் இதில் மெகாஊழல் நடந்துள்ளது எனவும் கூறி கள்ளக்குறிச்சி எம் எல் ஏ.பிரபு சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

kallakurichi mla complaints about scam

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பிரபு, "ஒரு பணியாளருக்கு 10 லட்சம் முதல் 13 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்துள்ளார் தாசில்தார் தயாளன். அவருக்கு உறுதுணையாக இருந்துள்ள துணை தாசில்தார் உட்பட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சார் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்கவே அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்றார். ஆளும் கட்சி எம்எல்ஏ இப்படி பரபரப்பான ஊழல் குற்றச்சாட்டை வெளியே கொண்டு வந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment