/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/652_25.jpg)
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபளையம் மற்றும் கரியாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், எஸ்.ஐ. அகிலன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தணிகாசலம், மொட்டையன்,ராஜேந்திரன் ஆகியோர்கள் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது கச்சிராயபாளையம் மற்றும் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)