Advertisment

கள்ளக்குறிச்சி கலவரம்- ட்விட்டருக்கு காவல்துறை கடிதம்! 

Kallakurichi riot- Police letter to Twitter!

கள்ளக்குறிச்சியில் நடந்தகலவரம் தொடர்பாக, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில்வதந்திப் பரப்பிய விவரங்களைக் கோரி டவிட்டர் நிறுவனத்திற்கு காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி அருகே மாணவியின் மரணம் தொடர்பாக, கடந்த ஜுலை 17- ஆம் தேதி நடந்த கலவரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கலவரத்தைத் தூண்டும் வகையில் 32 வகையான வதந்திகள், சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டதாக காவல்துறை ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், வதந்தி பரப்பப் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்கு விவரங்களை காவல்துறை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisment

வதந்திகளைக் கொண்ட ட்விட்டர் கணக்கு விவரங்களைக் கேட்டு, அந்த நிறுவன நிர்வாகத்திற்கு கள்ளக்குறிச்சி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

police Tamilnadu twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe