kallakurichi incident police investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொர்படா குறிச்சி காட்டுக்கொட்டாய்பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி, வயது 61. இவருடைய மகள் அருள்செல்வி வயது 34. இவரை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

Advertisment

அதன் மூலம், அருள் செல்விக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அருள்செல்விக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டுப்பிரிந்து தனியே வாழ்ந்துவருகிறார்அருள்செல்வி.மேலும், நமச்சிவாயபுரம் என்ற ஊரில் குத்தகைக்கு நிலம் எடுத்து அதில் விவசாயமும் செய்து வருகிறார்.

Advertisment

இவருக்கு துணையாக இவருடைய தந்தை அருள்மணி அவருடன் இருந்துவருகிறார். இந்த நிலையில், அருள் செல்விக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயது சின்னதம்பி என்பவருக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அருள்செல்வியின் தந்தை, அருள்மணிக்கு தெரியவரவே மகளை கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்கள் தங்கள் உறவை அருள்மணிக்கு தெரியாமல் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்செல்வியுடன் சின்னதம்பி அப்பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். தற்செயலாக வீட்டுக்குச் சென்ற தந்தை அருள்மணி கதவை தட்டியுள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்து சின்னதம்பி கதவை திறந்துவெளியே வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருள்மணி என் மகளின் வாழ்க்கை ஏற்கனவே சீர்கெட்டுக் கிடக்கிறது, மேலும் சீர்கெட வேண்டுமா என்று கோபத்துடன் கத்தி, சத்தம் போட்டுள்ளார்.

அதோடு அருள்மணி கையில் வைத்திருந்த கத்தியால் சின்னதம்பியை நெஞ்சில் குத்தியுள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பதியில் பரபரப்பானது. இந்தத் தகவல் சின்னசேலம் போலீசாருக்கு தெரியவரவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குகாயம்பட்டுக் கிடந்த சின்னதம்பியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததனர்.

Ad

பின்னர்,மேல் சிகிச்சைக்காக சின்னதம்பி, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து சின்னதம்பியின் வாக்குமூலத்தின்பேரில் போலீசார் அருள்மணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் முறையற்ற உறவின் விவகாரத்தில் கோபமடைந்த தந்தை அருள்மணி தற்போது போலீஸ் வழக்கில் சிக்கியுள்ளார்.