kallakurichi incident police arrested

கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள மோரை பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு வயது 58. இவர் பல வருடங்களாக மனைவியை பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது தங்கை சசிகலா அவரின் கணவர் டேவிட் அன்புமணி இவர் தனக்கு சொந்தமான ரைஸ்மில் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய்கு விற்பனை செய்துள்ளார்.

Advertisment

அதில் 35 லட்சம் ரூபாய் பணத்தை டேவிட் அன்புமணியும் திருநாவுக்கரசும் கூட்டாக தனியார் வங்கியில் செலுத்தி கணக்கு வைத்து பராமரித்தனர். சில ஆண்டுகளுக்கு முன் அன்புமணி இறந்துபோய் உள்ளார். வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து திருநாவுக்கரசு தன் இஷ்டம் போல செலவு செய்துள்ளார். இந்த நிலையில் டேவிட் அன்புமணியின் மகன் (35 வயது) சர்வேஸ்வரன் தாய்மாமன் திருநாவுக்கரசிடம் சென்று தனது தந்தை அன்புமணிக்கு சேர வேண்டிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

Advertisment

இதனால் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் சர்வேஸ்வரன் அவரது தங்கை ராணி ஆகிய இருவரும் சென்று திருநாவுக்கரசிடம் பணம் கேட்டு தகராறு செய்து உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இருவரும் தாய்மாமன் திருநாவுக்கரசை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே திருநாவுக்கரசு இறந்து போயுள்ளார். இதையடுத்து சர்வேஸ்வரன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தானே சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து திருநாவுக்கரசு மனைவி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சர்வேஸ்வரன் அவரது தங்கை ராணி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். தாய் மாமனை அடித்துக் கொலை செய்த சகோதரியின் மகன் மகள் ஆகியோரின் செயலை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.