Advertisment

கள்ளக்குறிச்சி சம்பவம்... மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளப் பெற்றோர் சம்மதம்?

 Kallakurichi incident... parents agree to receive the body of the student?

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர்கள் மகளின் உடலைப் பெற்றுக்கொள்ளசம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நேற்று முன்தினம் மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையிலேயே உடற்கூராய்வு முடிந்தது. நேற்றே மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisment

பெரிய நெசலூர் கிராமத்திற்கு செல்லும் சாலைகள், மாணவியின் வீடு, மயான பகுதி உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் இது தொடர்பான தங்களின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்இருப்பதால் உடலை வாங்கமாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இன்றே இறுதிச்சடங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்க இருக்கிறது.

police Cuddalore kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe