Kallakurichi incident... Charan was the one who hit the school bus with a tractor

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில் கலவரத்தின் பொழுது டிராக்டரை கொண்டு பள்ளி பேருந்துகளை மோதி சேதப்படுத்திய இளைஞரை வீடியோ ஆதாரங்களைக் கொண்டு போலீசார் தேடிவந்த நிலையில் சின்னசேலத்தை அடுத்துள்ள பங்காரம் ஊராட்சியைச் சேர்ந்த ஜெயவேல் என்ற 22 வயது இளைஞர் வழக்கறிஞருடன் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Advertisment