Kallakurichi husband and wife issue husband passes away wife in treatment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரும்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரங்கநாதன், இவரது மகன்கள் மணிகண்டன், குழந்தைவேல் இவர்களில் மணிகண்டன் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இதில் குழந்தைவேல் திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அனுராதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Advertisment

இவர்களுக்கு குழந்தை இல்லை குழந்தைவேலு வேலையில் இல்லாததால் தனது தந்தை சொத்தில் 2 ஏக்கர் நிலத்தை பாகம் பிரித்து தரும்படி தந்தை ரங்கநாதனிடம் சென்று கேட்டுள்ளார். குழந்தைவேல் அவரது தந்தை நிலம் பிரித்து தராததால் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் தந்தையிடம் சென்று நிலத்தைப் பிரித்து தருமாறு மீண்டும் தகராறு செய்துள்ளார். அவரது தந்தை மறுக்கவே மனமுடைந்த குழந்தைவேல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். கணவர் பூச்சி மருந்து குடிப்பதை பார்த்து பதறிய அவரது மனைவி அனுராதா அவரிடமிருந்து மருந்தை வாங்கி அவரும் குடித்துள்ளார்.

Advertisment

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தைவேல் இறந்து போய்விட்டார். உயிருக்கு போராடிய அனுராதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் நிலம் பாகம் பிரித்து தராத பிரச்சனையில் மனமுடைந்து விஷம் அருந்தியதில் அதில் கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி உயிருக்குப் போராடும் இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.