கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்குச்சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இருந்து காணொலிவாயிலாக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் ரூபாய் 7.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறைசார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி சிறுவாங்கூர் கிராமத்தில் ரூபாய் 381.76 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி கட்டப்படவுள்ளது. மத்திய அரசின் பங்களிப்பாக ரூபாய் 195 கோடியும், மாநில அரசு பங்களிப்பாக ரூபாய் 186.76 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.