Advertisment

கள்ளச்சாராய மரணம்; நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

kallakurichi fake liquor incidentl Actor Vijay consoled

Advertisment

கள்ளக்குறிச்சியில்கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்துள்ள விஜய், அங்குசிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும்ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

incident kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe