/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kallakurichi district.jpg)
அதிமுகவில் கோஷ்டி பூசல் காரணமாக மாவட்டத்தை பிரிக்க கோரிக்கை எழுவதாக நக்கீரனில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதில் முக்கியமானது காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாக பிரிப்பதாக இருந்தது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் சி.வி.சண்முகம், குமரகுரு ஆகிய இரண்டு பேர் உள்ளார்கள். உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுடன், எடப்பாடி பழனிசாமி குடும்பம் தனிப்பட்ட முறையில் நட்பு வைத்துள்ளது.
குமரகுருவை மாவட்டச் செயலாளராக கொண்டுவர வேண்டும், அதே நேரத்தில் மணலை கையில் வைத்திருக்கும் சி.வி.சண்முகத்தை எடப்பாடிக்கு அடங்கி போக மாட்டேங்குறார். ஓ.பி.எஸ். சொல்வதையெல்லாம் கேட்கிறார் என்பதால் அவரை அடக்க வேண்டும் என்பதற்காக கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக அறிவித்திருகிறார் எடப்பாடி பழனிசாமி.
  
 Follow Us