Advertisment

ஏரியில் இளைஞர் சடலம்... அதிர்ச்சியில் மக்கள்!

kallakurichi district youngster river police investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தூர் காலனி பாளையப்பட்டு தெருவில் வசிக்கும் லட்சுமணன் என்பவரது மகன் மணிகண்டன்(30). இவர், உளுந்தூர்பேட்டையில் ஃபோட்டோ, வீடியோ ஸ்டுடியோநடத்திவருகிறார்.

Advertisment

மணிகண்டன், நேற்று இரவு சுமார் 8 மணி அளவில், கடையைப் பூட்டிவிட்டு, வீட்டுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டார். குண்டூர், பேட்டை - சென்னை சாலையின் ஓரமாகத் தனது டூவீலரை நிறுத்திய பிறகு,அருகில் உள்ள ஏரி பகுதிக்குள் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த இரவு ஸ்டுடியோவை மூடிவிட்டு மணிகண்டன் வீட்டுக்கு வருவார் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

Advertisment

இரவு நீண்ட நேரமாகியும் மணிகண்டன் வீட்டிற்கு வந்து சேரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். விடியும்வரை அவர் வீட்டிற்கு வந்துசேரவில்லை. இந்தநிலையில், இன்று காலை, சுமார் 7.30 மணி அளவில், ஏரிப் பகுதிக்குஅப்பகுதிமக்கள் சென்றுள்ளனர்.

அப்போது, அங்கே ஒரு வாலிபர் இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதையடுத்து, டி.எஸ்.பிவிஜயகுமார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர் செல்வநாயகம், ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றினர்.

அப்போது, போலீசாரின் விசாரணையில், இறந்துகிடந்த வாலிபர் மணிகண்டன் என்பதும் அவரது பின் மண்டை மற்றும்கழுத்துப் பகுதியில் காயம் இருந்ததும் காதுகளில் ரத்தம் வழிந்ததும் தெரியவந்துள்ளது.

மணிகண்டனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மணிகண்டன் எதற்காக, ஏரி பகுதிக்குச் சென்றார். அவருடன் வேறு யாராவது சென்றார்களா. எப்படி அவர் இறந்தார். அவர் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டன. யாராவது அவரை கொலை செய்தார்களாஎனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe