Skip to main content

பிச்சை எடுக்கும் போராட்டம்... 

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
100 Day Work Plan

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகிலஇந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் களமருதூர். பெரியார் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிசெய்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார்கள்.

 

அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகளுக்கு மத்திய அரசு 256 ரூபாய் கூலி வழங்குமாறு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் எங்கள் களமருதூர் ஊராட்சியில் அதனைச் சார்ந்த பெரியார் நகர் பகுதியில் 100 நாள் வேலை செய்யும் எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் 130 ரூபாய் மட்டுமே கூலியாக வழங்குகிறது.

 

அரசின் சட்டத்திற்கு விரோதமாகக் கூலியைக் குறைத்துத் தருவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் உரிய பதில் இல்லை. எனவே ஒன்றிய அலுவலகம் முன்பு எங்களுக்கு வழங்க வேண்டிய 256 ரூபாய் தினசரி கூலியை வழங்க வேண்டும். அதை விடுத்து 130 ரூபாய் எங்களுக்குப் பிச்சையாக வழங்கக்கூடாது என்று கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துகிறோம்.

 

100 நாள் வேலைக்குச் சென்று வேலை செய்யும் ஒரு நபருக்கு தினசரி 256 ரூபாய் கூலி வழங்க வேண்டும். ஆனால் எங்கள் ஊராட்சியில் 130 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது எங்களுக்கு சேர வேண்டிய மீதி 126 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பங்கிட்டுக் கொள்கிறார்களா? இதில் முறைகேடு நடப்பதாகக் கருதுகிறோம். உயரதிகாரிகள் இந்தத் திட்டப்பணிகளைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 100 நாள் வேலை செய்யும் கூலிப் பணியாளர்களுக்கு 256 ரூபாய் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

எங்களுக்கு மத்திய அரசு அறிவித்த 256 ரூபாய் கூலி வழங்கும் வரை எங்கள் போராட்டம் அவ்வப்போது தொடரும் என்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர், களமருதூர் கிராம மக்கள், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் ஜெய்சங்கர் ஒன்றியச் செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இவர்களது கோரிக்கையை அரசுஅதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
100 days holiday with pay for scheme workers on election day

தேர்தல் நாளன்று வாக்களிக்க வசதியாக, நூறு நாள் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இதையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிலகங்களுக்கும் ஒருநாள் ஊதியத்துடன் விடுப்பு விடப்பட்டு உள்ளது. அதேபோல், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று இத்திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ அறிவித்துள்ளார்.