/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_26.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மகன் ஜெயவேல் (வயது 40). இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவங்கூர் கிராமத்தில் கிராம ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஜெயவேல் நேற்று மாலை 5 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் ஏரிக்கரை பகுதியில் ஆள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் சடலமாகத்தொங்கியுள்ளார்.
அப்போது இப்பகுதி வழியே சென்றவர்கள் ஜெயவேல் பிணமாகத்தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து உடனே கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் சடலமாகத்தொங்கிய ஜெயவேல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிராம ஊராட்சியின் முக்கிய பொறுப்பில் வேலை செய்து வந்த ஜெயவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாராஎனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாகவிசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us