/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_29.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் திருவண்ணாமலை சாலையில் உள்ளது கடுவனூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது ராஜேந்திரன். இவரது மகன் 23 வயது மணிகண்டன். இவருடைய மனைவி 22 வயது நதியா.
இவர்களுக்குள் அவ்வப்போது குடும்பச் சண்டை நடந்துவந்துள்ளது. மணிகண்டன், குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மணிகண்டன், குடிபோதையில் அவரது மனைவி நதியாவிடம் அவரது பெற்றோர்களிடம் சென்று ரூ.50 ஆயிரம் பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு நதியா மறுத்துள்ளார்.
இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன்,மனைவி நதியாவைக் கத்தியால் குத்துவதற்கு கையில் கத்தியுடன் பாய்ந்துள்ளார். இதனை தற்செயலாக பார்த்துவிட்ட மணிகண்டனின் தந்தை ராஜேந்திரன், மகனிடம் இருந்து மருமகள் நதியாவைக் காப்பாற்றும் நோக்கத்தில், நதியா மீது பாய்ந்த மணிகண்டனைகுறுக்கே சென்று தடுத்துள்ளார்.
நதியாவைகத்தியால் குத்துவதற்குப் பாய்ந்த மணிகண்டன், தடுக்க வந்த தந்தை ராஜேந்திரனின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்று சேர்த்துள்ளனர். அவர், அங்கு தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (11/01/2021) ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சங்கராபுரம் போலீசார் மணிகண்டன், தனது தந்தை ராஜேந்திரனை கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.
Follow Us