ADVERTISEMENT

கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது...

11:27 AM Jul 27, 2020 | rajavel

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அவரது மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு கருப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பெண்கள் அவரது மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய காத்திருப்பதாகவும், அவர் போலி மருத்துவர் எனவும் மேலூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் பங்கஜம் என்பவருக்கு தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முருகேசன் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த இரண்டு பெண்கள் மற்றும் அதற்காக காத்திருந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து போலி மருத்துவர் முருகேசனிடம் நடத்திய விசாரணையில், அவர் டி.பார்மசி மட்டுமே படித்துவிட்டு மருத்துவமனை உருவாக்கி பலருக்கும் சட்டவிரோதமான முறையில் ரகசியமாக கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இவருக்கு கச்சராபாளையம் கள்ளக்குறிச்சி விருகாவூர், அசகளத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சிலர் புரோக்கர்களாக இருந்தது கொண்டு அங்கிருந்து கருகலைப்பு செய்ய விரும்பும் பெண்களை கண்டறிந்து அவர்களை இவரது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் முருகேசனை கைது செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சியில் செயல்பட்டுவரும் இவருடைய கருக்கலைப்பு மையத்தையும் கண்டறிந்து அதற்கு சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இவருக்கு ஆள் பிடித்து அனுப்பும் புரோக்கர்களையும் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தங்கள் காதலர்களுடன் தனிமையில் இருக்கும்போது, முறைதவறிய நெருக்கம் ஏற்படுவதால் அதன்மூலம் கற்பமாகும் இளம் பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் முறைதவறிய காதலில் ஈடுபடும் பெண்கள் கற்பமடைகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், கர்ப்பம் அடைந்தது வெளியே தெரிந்துவிடும் என்பதால் இது போன்ற போலி மருத்துவர்களிடம் யாருக்கும் தெரியாமல் சென்று கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகரிக்கின்றனர். இதுகுறித்து அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT