எடைக்கல் காவல் நிலையத்தை பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை...

police station

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் எடைக்கல் கிராமத்தில் வாடகை இடத்தில் காவல் நிலையம் கடந்த 4, 5 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்தது. தற்போது தமிழக அரசால் ஆசனூரில் சொந்த கட்டிடம் கட்டி, காவல் நிலையம் திறந்து கடந்த 2 ஆண்டுகாளாக இயங்கி வருகின்றது. இருப்பினும் ஆசனூரில் உள்ள காவல் நிலையத்திற்கு இன்னமும் எடைக்கல் என்று பெயர் சூட்டப்பட்டு அனைத்து அரசு ஆவணங்களிலும் இன்றளவும் செயல்பாட்டில் இருந்து வருகின்றது.

இந்நிலை வருந்தத்தக்கது,ஆகவே எடைக்கல் காவல் நிலையம் என்பதை ரத்து செய்து, ஆசனூர் காவல் நிலையம் என்ற முகவரியில்பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசனூர் மக்கள் நலச்சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்.

kallakurichi police station
இதையும் படியுங்கள்
Subscribe