
கள்ளக்குறிச்சி மாவட்டம் துருவூரைச் சேர்ந்தவர் மதியழகன் (25). சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தனியார் கிளினிக்கில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
கிளினிக் அருகில் வசித்து வரும் 15 வயதுள்ள பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை, மதியழகன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருமந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மருத்துவர் மதியழகன் மீது போக்சோ சிறப்புச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Follow Us