Kallakurichi District Collector's Office should not carry out construction work - High Court

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

Advertisment

கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது, கோவில் நிலத்திறகு இழப்பீடு நிர்ணயித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லையென மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதிப்பீடு செய்யப்பட்ட அறிக்கையை மனுதாருக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை பெறாமல் கட்டுமான பணிகளை தொடர கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டனர்.