kallakurichi collector building fraudulent sub registrar suspend

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு சார் பதிவாளர்அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் இரண்டாவது சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 2 மற்றும் 5 ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி நகரத்தையொட்டியுள்ள சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் மகன் கோபி என்பவர் கள்ளக்குறிச்சி மருத்துவமனை சாலை பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரது மனைவி சேது மணி அம்மாள் என்பவருக்கு சர்வே எண் 5ல் சம்பந்தப்பட்ட இரண்டரை சென்ட் இடம் எழுதி பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார் சார் பதிவாளர் கதிரவன்.

Advertisment

ரூ.7,33,600 மதிப்புள்ள இந்த இடம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது. இங்குதான் மாவட்ட ஆட்சியர் குடியிருக்கும் பங்களா முகாம் அலுவலகம் ஆகியவை செயல்படுகிறது. அந்த பங்களாவைத்தான் பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர். இது குறித்த தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் ரூபியா பேகத்திற்குத்தெரிய வர, அவர் சென்னை பத்திரப் பதிவுத்துறை தலைவருக்குத்தகவல் அளித்துள்ளார். இதையடுத்து ஆட்சியர் பங்களாவை விற்பனை செய்து அதைப் பத்திரப் பதிவு செய்து கொடுத்த பதிவாளர் கதிரவனை, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisment