
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிரபு, தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டுமென்றும்,பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பிரபு. இவர், சௌந்தர்யா என்ற கல்லூரி மாணவியை இன்று திடீரென திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், இவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த பெண்ணின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், என் மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். என் மகளை, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு மிரட்டல் வருகிறது. எனவே, எனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)