Advertisment

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் விசாாிக்க நீதிமன்றம் அனுமதி

கடந்த 8-ம் தேதி களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்த எஸ்.ஐ வில்சனைஅப்துல்சமீம், தவ்பீக் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனா். நாடு முமுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொலையாளிகளை கா்நாடக உடுப்பியில் வைத்து 14-ம் தேதி போலீசாா் கைது செய்தனா்.

Advertisment

kaliyakavilai wilson case...

அவா்களை 16-ம் தேதி அதிகாலையில் குமாி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். பின்னா் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்திய போலீசாா் அவா்களை 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கபட்டு 20-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து தீவிரவாதிகள் இரண்டு பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

Advertisment

இந்த நிலையில் 20-ம் தேதி மீண்டும் நாகா்கோவில் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீசாா் அப்துல்சமீமையும்,தவ்பீக்கையும் போலீஸ் கஸ்டடியில் 28 நாட்கள் எடுத்து விசாாிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா். இதனை தொடா்ந்து நீதிபதி அதுசம்மந்தமாக 21-ம் தேதி (இன்று) மதியம் முடிவு எடுக்கபடும் என்றாா். இதை தொடா்ந்து மீண்டும் இன்று இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினாா்கள்.

kaliyakavilai wilson case...

இதைத்தொடா்ந்து போலீஸ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி அப்துல் சமீம், தவ்பீக் இருவரையும் 28 நாட்களுக்கு பதில் 10 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாாிக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதை தொடா்ந்து போலீசாா் இருவரையும் பாதுகாப்புடன் அழைத்து சென்றனா். விசாரணைக்காக அவா்களை கேரளா, சென்னை, கா்நாடகா, பெங்களூா், டில்லி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாாிக்க முடிவு எடுத்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறினாா்கள்.

highcourt police Kanyakumari wilson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe