சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைசெய்யும் தொழில் செய்து வருபவர் பொற்கொல்லர் முத்துக்குமரன்(41). இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி மொத்தம் 729 மில்லி தங்கத்தில் மூன்று சென்டிமீட்டர் உயரம், மூன்று சென்டிமீட்டர் அகலம் அளவில் கலைஞரின் உருவத்தை வடிவமைத்துள்ளார். இதில் 630 மில்லி தங்கத்தில் கலைஞரின் உருவத்தையும், 99 மில்லி தங்கத்தில் கலைஞர் என்ற கருப்பு சிவப்பு எழுத்தில் பெயரையும் செய்துள்ளார். பொற்கொல்லர் முத்துக்குமரன் ஏற்கனவே குறைந்த அளவு தங்கத்தில் இந்திய பாராளுமன்றம், தமிழக சட்டசபை, நடராஜர் கோவில், தாஜ்மஹால் உள்ளிட்டபலவற்றை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞரின் 99வது பிறந்த நாள்! தங்கத்தில் சிலை செய்த பொற்கொல்லர்!
Advertisment