
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன்.
தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வந்த சண்முகநாதனை 1967-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது உதவியாளராக கலைஞர் அழைத்துக்கொண்டார். சண்முகநாதனின் தந்தை மறைந்தபோது இடுகாடு வரை நடந்தே சென்று அஞ்சலி செலுத்தி தனது உதவியாளரை அவரது ஊரார், உறவினர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்தியுள்ளார்கலைஞர். அரசியல் வட்டாரத்தில் கலைஞரின் நிழல் என்று அழைக்கப்பட்டவர் சண்முகநாதன். வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us