nn

அண்மையில் திமுக அமைச்சர் பொன்முடி கட்சி பொதுக்கூட்ட நிகழ்வில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் மதுரை ஆதீனம் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''அமைச்சராக இருப்பவர்கள் எல்லா சமயத்தையும் புடிச்சிருக்கோ பிடிக்கவில்லையோ ஒரு சமயத்தை உயர்த்தி பிடிப்பதும் ஒரு சமயத்தை இழிவாக பேசுவதும் ஒரு வாடிக்கையாகவே போய்விட்டது.அதனால் முதல்வர் அதை கண்டிக்க வேண்டும். எல்லோரையும் கூட்டி வைத்து திமுகவின் பேச்சாளர்கள் சில பேரை கண்டிக்க வேண்டும். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என ஒருவர் இருக்கிறார். முதல்வரின் கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன். பெரியவர்கள் சிறியவர்கள் என மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. முதல்வர் அவரை கண்டிக்கனும்.

Advertisment

தண்டபாணி தேசிகர் தருமைஆதீனத்தின்புலவர். அவர்தான் கலைஞருடைய ஆசிரியர். கலைஞர் முதல்வரான உடன் அவரை கூட்டி வந்து உடனடியாக மரியாதை கொடுக்கிறார். அது மட்டுமல்ல செம்மொழி மாநாட்டில் குமரகுருபரருடைய படத்தை கலைஞர் வெளியிட்டார் கலைஞர். அப்படி கலைஞர் சைவ சமயத்தின் மீது எவ்வளவு ஈடுபாடாக இருந்திருக்கிறார். அப்படி இருக்க, பொன்முடி பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் சூப்பர் பாஸ்ட் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அவரை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் பதவியை எடுத்தரணும். மற்ற அமைச்சர்களும் இது மாதிரி பேசாம எல்லோரையும் ஒன்று கூடி கண்டிக்க வைக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.