கலைஞரின் சிலை திறப்பு விழா - டெல்லியிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் வருகை!

Visit Defense Officials from Delhi!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந் தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கலைஞரின் சிலையை திறந்து வைக்கிறார்.

அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிணராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி வரவுள்ளதையொட்டி டெல்லியிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவிடம் மற்றும் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

kalaingar statue
இதையும் படியுங்கள்
Subscribe