ட்ரக்கியாஸ்டமி சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பினார்.

Advertisment

kalaignar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

திமுக தலைவர் கலைஞர், உடல்நலக் குறைபாட்டின் காரணமாகவும், வயது முதிர்வின் காரணமாகவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சென்னை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார்.

சமீப காலமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். அவர் பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற வீடியோ காட்சிகளும் அவ்வப்போது வெளியாகி திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் அழ்த்தியது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கலைஞரின் மூச்சுக்குழாயில் அவருக்கு பிரச்சனை இருப்பதன் காரணமாக அவருக்கு ட்ரக்கியாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது குழாய் மாற்றும் பொருட்டு, காவேரி மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக இன்று காலை அவர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவருக்கு மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளை நடத்திய மருத்துவர்கள் ட்ரக்கியாஸ்டமி குழாயை மாற்றியமைத்தனர். அதன் பிறகு மருத்துவமனையிலிருந்து டிசார்ச் செய்யப்பட்ட கலைஞர் இன்று மாலை கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார்.