Skip to main content

'தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன் ஊதியம் வழங்கியவர் கலைஞர் தான்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

Published on 25/02/2024 | Edited on 25/02/2024

 

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவானது திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.ச சார்பாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் முடி திருத்துவோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தொமுச பொதுச்செயலாளர் கணேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டமைப்பு செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி மற்றும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொமுச பேரவை பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மராத்தான் போட்டியில் எட்டு முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் மற்றும் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவர்களும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். இதையடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 500 பேருக்கு மளிகை பொருட்கள் ஆகியவற்றை அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில், ''கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தொமுச பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தொமுச நிறுவுவதற்கு கலைஞர் அரும்பாடுபட்டார். முதன்முதலில் தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன் ஊதியத்தையும் வழங்கியவர் கலைஞர் தான். எனவே இந்த நிகழ்ச்சி கொண்டாடுவதில் தோமுசவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்''என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

''ராகுல் காந்தியே வருக... புதிய இந்தியாவை தருக...''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
"Rahul Gandhi come... bring a new India..."- Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், 'ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது'' என்றார்.

Next Story

“எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்குத்தான்” - அமைச்சரிடம் வாக்குறுதி கொடுத்த மக்கள்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Minister I. Periyasamy who collected votes from the people

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணிக்கட்சி சார்பில் சி.பி.எம். கட்சி வேட்பாளராக சச்சிதானம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திண்டுக்கல் மாநகரில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் திறந்த ஜீப்பில் வேட்பாளர் சச்சிதானந்ததுடன் வாக்குசேகரித்தார்.

அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் பேகம்பூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நின்று கொண்டு, தொழுகை முடிந்து வரும் இஸ்லாமிய பெருமக்களிடம் கூட்டணி கட்சி வேட்பாளரான தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு, பிட் நோட்டீஸ் கொடுத்து ஆதரவு திரட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த இஸ்லாமிய மக்கள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கரங்களைப் பிடித்து எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்குத்தான் என்று கூறி உறுதியும் அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜ்குல் ஹக்,  பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், இலக்கிய அணி அமைப்பாளர் இல.கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் எனப் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.