kalaingar kovai dmk

முன்னாள் தி.மு.க. தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் நினைவேந்தல் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை வடக்கு மாவட்டம் 3-ஆவதுபகுதியில் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் கோவை வடக்கு மாவட்டம் 3- ஆவது பகுதி கழகச் செயலாளர் சண்முகசுந்தரம் பங்கேற்றார்.

Advertisment

kalaingar kovai dmk

அப்பொழுது அவர், 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்கிற வார்த்தைகளை தலைவர் கலைஞர் அவர்கள் உதிர்த்தாலே போதும் உடன் பிறப்புகளின் உடலுக்குள் ஊடுருவி விடுவார். கலைஞர் சொல்லிய வார்த்தைகள் இன்னும் எல்லா உடன்பிறப்புகளுக்குள்ளும் ஊடாடிக் கொண்டேதான் இருக்கின்றன. கலைஞரின் இந்த இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை கண்ணீர்க் கசிய உடன் பிறப்புகள் மனமுருகியதைக் கண்ணாறக் கண்டேன். இதைப் பார்த்த போதே சொல்லத் தோன்றியது. கலைஞரின் இந்த இரண்டாம் நினைவேந்தலே இன்னும் 200 ஆண்டுகள் பேசும்'' எனக் கோவை வடக்கு மாவட்டம் 3- ஆவது பகுதி கழகச் செயலாளர் சண்முக சுந்தரம் பேசினார்.

Advertisment