Advertisment

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்

kalaingar birthday celebration in Cuddalore district

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்ட மாவட்டத்தில் நகரம், கிராமம் என பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

Advertisment

இதில் கடலூர் மாநகரத்தில் கடலூர் மாநகர கழகம் சார்பில், கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் தலைமையில், கடலூர் உழவர் சந்தையிலிருந்து அமைதி பேரணியாக சென்று, கடலூர் மாநகர கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisment

முன்னதாக கடலூர் உழவர் சந்தையில், 700 நபர்களுக்கு காய்கறிகள் மற்றும் புடவைகள், வேட்டிகள், உணவு, மரக்கன்றுகளை எம்.ஆர்.கே.பி.கதிரவன் வழங்கினார்.

இந்நிகழ்வில் கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, கடலூர் தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் சுவை சுரேஷ்,மாநகர கழக செயலாளர் கே.எஸ்.ராஜா, மேயர் சுந்தரி ராஜா, ஒன்றிய கழக செயலாளர் பி.சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர்.பாலமுருகன், மாநகர கழக அவைத்தலைவர் பி.பழனிவேல் உள்ளிட்ட வட்டக் கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

அதேபோல் சிதம்பரம் நகரத்தில் அனைத்து வார்டுகளிலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்தை அலங்கரித்து பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். இதில் மூத்த நகர் மன்ற தலைவர் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு. சந்திரசேகரன் ஏ.ஆர்.சி.மணிகண்டன், திமுக நகரத் துணை செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் என திரளாகக் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் அருகே கிள்ளையில் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மீனவ மக்கள் இணைந்து கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார். அதேபோல் சி.கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல் நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கலைஞரின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Cuddalore birthday kalaingar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe