ADVERTISEMENT

கலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

10:59 PM Aug 07, 2020 | prithivirajana


ADVERTISEMENT

ADVERTISEMENT

மறைந்த தமிழக முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கரோனா முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, முகக் கவசம் அணிந்தவாறு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியின்மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மருத்துவ அலுவலரிடம் வழங்கினார்.

அதேபோல், வடலூர் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பி.பி.டி. கிட், சானிடைசர், முகக் கவசம், கையுறை போன்ற உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் குறிஞ்சிப்பாடி, வடலூர் பேரூராட்சி மற்றும் தொகுதி முழுவதும் உள்ள ஊரக தூய்மைப் பணியாளர்களுக்கு லுங்கி, சேலை வழங்கப்பட்டது. மேலும் வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளிலும் மற்றும் தொகுதி முழுவதிலும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.சிவக்குமார் மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT