Published on 19/02/2021 | Edited on 19/02/2021

கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பாற்றிய கலைஞர்களுக்குத் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோருக்குக் ‘கலைமாமணி’ விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சௌகார் ஜானகி, நடிகர் ராமராஜன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோருக்குக் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பின்னணி பாடகி ஜமுனா ராணிக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.