திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதாக வந்த அறிவிப்பை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு வந்து நலம் விசாரித்து செல்கின்றனர். கலைஞரின் உடல்நிலை குறித்த கவலையினால் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுர இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஏற்பட்டிருந்த தொற்றுநோயும் குணமாகிக் கொண்டு வருகிறது. எனவே, தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’என்று கூறினார்.