கலைஞர் மறைவை அடுத்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை!
’’உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் 8.30 முதல் நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதிவணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கழகத்தினரும், பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’’