ADVERTISEMENT

’கலைஞர் இல்லாதது என் வாழ்க்கையில் இருண்ட நாட்கள்’ – துரைமுருகன் கண்ணீர்

09:30 PM Aug 12, 2018 | raja@nakkheeran.in


திமுக தலைவராகவும், தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் இருந்த கலைஞர் ஆகஸ்ட் 7ந்தேதி இரவு மறைந்தார். திமுக 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கிறது. இந்நிலையில் அவரது நினைவு போற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மவுன ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT


இன்று ஆகஸ்ட் 12ந்தேதி மாலை 5 மணிக்கு வேலூர் மாநகரில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் வகையில் மவுன ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மவுன ஊர்வலம் கிரின் சர்க்கிள் பகுதியில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் கட்சியினர், பொதுமக்கள், வியாபார பெருமக்கள், இளைஞர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நடந்துவந்தனர். இந்த ஊர்வலத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், என் மீது அன்பு செலுத்தியவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவரை இழந்துவிட்டேன். அவர் இல்லாத நாட்கள் இனி என் வாழ்நாளில் இருண்ட நாட்களாக இருக்கும்’’ என கருதுகிறேன் எனச்சொல்லும்போது அவரது நா தழுதழுத்தது, கண்கள் கலங்கின.

ADVERTISEMENT


அவர் மேலும், எத்தனையோ தலைவர்களின் செயல்பாடுகளுக்காக அவர்கள் மறைந்தபின் கலைஞர் வலியுறுத்தி பாரதரத்னா விருது வாங்கிதந்தவர். அந்த தலைவருக்கு பாரதரத்னா நாங்கள் மட்டும் கேட்கவில்லை, கூட்டணி கட்சியினர், பிறகட்சியினர் வலியுறுத்துகிறார்கள். இதை மத்தியரசு பரிசீலிக்கவேண்டும் என்றார்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரிலும் கலைஞர் மறைவையொட்டி மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள், கட்சியினர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT