Advertisment

106 வயதில் கலைஞரின் நினைவாகவே இருக்கும் திமுக தொண்டன்!

திமுக தொடங்கிய உடன் அதில் சேர்ந்து முதல் செந்துறை ஒன்றிய செயலாளராகவும். தொடர்ந்து 25 ஆண்டுகள் ஒன்றியச் செயலாளராக இருந்தவர் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உள்ள நக்கம்பாடி ஊராட்சியை சேர்ந்த கந்தசாமி.

Advertisment

நான் 14 வயதில் தி.க.விற்கு வந்தேன். 1936ல் பெரியாரை சந்தித்து எனது திருமணத்திர்க்கு வரவேண்டும் என்றேன்.எந்த ஊருடா என்றார். உடையார் பாளையம் வேலாயுதம் ஊர் என்றேன். வருகிறேன் என்றார். ஆனால் திருமணத்திர்க்கு அவரால் வரமுடியவில்லை. தொடந்து நான் தி.க. வட்டச்செயலாளராக இருந்தேன். 1943ல் செந்துரையில் பெரியாரை அழைத்து கடவுள் இல்லை என்று கோழமிட்டு தீ மிதித்தேன். அதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஆள் வந்தார்கள். ஆனால் நாங்கள் 51 பேர் மட்டுமே தேர்வு செய்து நான் முதல் ஆளாக கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டே தீமிதியில் இரங்கு என பெரியார் சொல்ல நாங்களும் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என கோழமிட்டு தீ மிதித்தோம் என்றார்.

Advertisment

kalaignar

கந்தசாமி தி.க.வில் வட்ட தலைவராக இருந்தபோது திருச்சி மாவட்ட தி.க. மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடாச்சலம் என்ற வக்கில் இருந்தாராம். அவரின் ஏற்ப்பாட்டில்தான் பெரியார் முதன்முதலாக செந்துறைக்கு அழைத்து வந்தார்களாம். கடவுள் இல்லை என்று தீமிதி நடத்தினார்களாம். 1959ல் உள்ளாட்சி தேர்தலில்கந்தசாமி நின்றாராம், அப்போது உருப்பினராக தேர்ந்தெடுக்கப்டடு, 1960ல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 21 ஆண்டுகாலம் நக்கம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாராம்.

திமுக தொடங்கிய உடன் அதில் சேர்ந்து முதல் ஒன்றிய செயலாளராக இருந்தகந்தசாமி தொடர்ந்து 25 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தாராம்.சில ஆண்டுகளுக்கு முன் திமுக செயல் தலைவர் பெரம்பலூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இவரை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளார்.அய்யா நக்கம்பாடியார் வயது தற்போது 106. இன்றைக்கும் கலைஞரின் நினைவாகவே உள்ளார்.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe