திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னிவாடியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பயனாளிகளுக்கு சலுகை விலையில் மருந்து மாத்திரைகளை வழங்கிய பின்பு கன்னிவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.32.38 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் தங்கள் வீடுகளை தடையின்றி கட்டுவதற்கு 5 நபர்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கிய பின்பு விழா பின்புறம் அமைக்கப்பட்ட மேடையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 34 பேருக்கு தலா 1லட்சத்து1800 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை ரூ.34லட்சத்து61ஆயிரம் மதிப்பில் வழங்கினார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் நன்றியை தெரிவித்தனர். அவர்களை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ''மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் கலைஞர். உடல் குறைபாடு உள்ளவர்களை ஏளனம் செய்த போது மாற்றுத் திறனாளிகள் என மரியாதையாக அவர்களை அழைக்க வைத்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மாற்றுத்திறனாளிகள் மேன்மை அடைந்துள்ளனர். மேலும் அரசு பதவியில் பலர் உள்ளனர்'' என்றார்.
மூன்று சக்கர வாகனம் பெற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியை எமல்டா ஜாக்குலின் கூறுகையில், ''நான் மங்கமனூத்து கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளேன். எனது வீட்டில் இருந்து பள்ளிக்கு 5 கி.மீட்டர் செல்ல வேண்டும். இப்போது தமிழக அரசு சார்பாக அமைச்சர் அவர்கள் வழங்கிய இந்த ஸ்கூட்டர் எனக்கு பயன் உள்ளதாக இருக்கும். நேரத்திற்கு பள்ளிக்கு சென்று விடுவேன்''என்றார்.
தாடிக்கொம்பைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் முக்தீஸ்வரி கூறுகையில், ''அமைச்சர் ஐயாவிடம் மனு கொடுத்தேன் உடனடியாக எனக்கு மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பாக மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கி உள்ளனர். இது எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்'' என்றார்.
என்.பஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஜோசப் கனகராஜ் கூறுகையில், ''ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரை எங்கள் ஐ.பி. ஐயா தான் எங்களை தத்தெடுத்த பிள்ளை போல் பாவித்து எங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நான் ஊறுகாய் போட்டு என் வீட்டின் முன்பு தரையில் வைத்து விற்று வந்தேன். இப்போது அமைச்சர் ஐபி ஐயா அவர்கள் எனக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வழங்கியுள்ளார். இதன்மூலம் பல கடைகளுக்கு சென்று சரக்கு போட்டு எனது வியாபாரத்தை பெருக்குவேன்'' என்றார்.
நிகழ்ச்சியின்போது கோட்டாட்சியர் சக்திவேல், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் ப.க.சிவகுருசாமி, மூத்த திமுக நிர்வாகிகள் ரெக்ஸ், அமைச்சரின் உதவியாளர் வத்தலகுண்டு ஹரிஹரன், மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், மாரியப்பன், கன்னிவாடி பேரூராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமிசண்முகம், கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், செயல் அலுவலர் கல்பனாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், செட்டியபட்டி விடுதலைமுருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப்பட்டி அருண்ஜெகநாதன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் காளீஸ்வரி மலைச்சாமி, நாகலெட்சுமிரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதா, மெர்சி என்ற லெட்சுமி, சட்டமன்ற முகாம் அலுவலக அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் முருகன், பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் கொம்பன் என்ற பாலசுப்ரமணி, அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், கொத்தப்புளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுந்தரி அன்பரசு, துணை தலைவர் எம்.வி.ரெங்கசாமி, ரெட்டியார்சத்திரம் முன்னாள் நிலவள வங்கி செயலாளர் சக்கரவர்த்தி மணிமாறன், மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், எல்லை இராமகிருஷ்ணன், காமாட்சிபுரம் கமலக்கண்ணன், இலக்கிய அணியைச் சேர்ந்த குண்டு கண்ணன், பாறைப்பட்டி டாஸ்மாக் வடிவேலு, முத்தனம்பட்டி ராஜ்குமார், டி.புதுப்பட்டி உதயக்குமார் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-02/a2708.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-02/a2710.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-02/a2709.jpg)