திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள புதுப்பேடு பகுதியில் ஐந்தே கால் அடியில் கலைஞரின் சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக புதன்கிழமை பார்வையிட்டார். முரசொலி அலுவலகத்தில் நிறுவுவதற்காக, கலைஞர் அமர்ந்து எழுதுவது போன்ற இந்த வெண்கல சிலை தயார் செய்யப்பட்டு வருகிறது. வெண்கலத்தினால் செய்யப்படும் சிலை, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முரசொலி அலுவலகத்தில் வைக்கப்படும் என தெரிகிறது.