சென்னை மெரினா அருகே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கலைஞரின் முழு உருவ சிலையை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு இன்று கலைஞரின் முழு உருவ சிலைகளுடன் சிற்பி ஒருவர் வந்துள்ளார். அப்போது, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கலைஞரின் சிலையை கண்ட பொதுமக்கள் ஆச்சர்யத்தில் திகைத்தனர். கலைஞர் சிலைகளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைக்க விரும்பி அதனை அந்த சிற்பி எடுத்து வந்துள்ளார்.
மிக யதார்த்தமாக கலைஞர் கையில் பேனாவுடன் சிந்தனை செய்வது போல் இருக்கும் அந்த சிலையுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துச்சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-08/ka_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-22_at_16.37.02.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-22_at_16.37.29.jpeg)