kalaignar

வரும் ஜனவரி 2ஆம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி 2ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது.

Advertisment

கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது தொடர்பாக அன்று மாலை சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.

Advertisment

அப்போது, சட்டமன்றத்தில் கலைஞர் திருவுருவப்படத்தை வைப்பது தொடர்பாக அலுவலல் ஆய்வு குழு கூட்டத்தில் திமுக வலியுறுத்த உள்ளது. ஆனால் அதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

அதே நேரத்தில் ராமசாமி படையாட்சியார்திருவுருவப்படத்தை திமுக உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மேல் வைப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்து கொண்டிருக்கிறார்.

Advertisment

ஏழு லட்சம் ரூபாய் செலவில் ராமசாமி படையாட்சியார் திருவுருவப்படத்தை தயார் செய்து சட்டமன்றத்தில் வைக்க எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளது.