ADVERTISEMENT

பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி

05:52 PM Jun 22, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கலைஞரின் நினைவாகப் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கலைஞருக்கு 134 அடி உயரத்தில், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிடம் அனுமதி பெறத் தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. அந்த வகையில் ஏற்கனவே சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் கழகம் சார்பில் கடலில் பேனா சிலை அமைக்க ஒப்புதல் வழங்கி இருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியில் 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அனுமதியில் ஐஎன்எஸ் அடையார் கடற்படை தளத்தில் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் போது எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூடாது. திட்டத்தைச் செயல்படுத்தும் போது நிபுணர் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட 15 நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதையடுத்து விரைவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT